ஆவணப் பதிவுத்துறையிலும் தனியார் மயமா? தேனியில் வெடித்த போராட்டம்!
ஆவணப் பதிவுத்துறையை தனியார் மயமாக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள ஈ-டெண்டர் முறைகளை ரத்து செய்ய வலியுறுத்தி தேனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உயர்த்தப்பட்ட வழிகாட்டி மதிப்பை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து துறை சார்ந்த ஆவண எழுத்தர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
